
படலை - Padalay - Books, Music and Life in Tamil
இந்த போட்காஸ்ட், வாசிப்பு, இசை, மனிதர்கள், பயணங்கள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய உரையாடல்களைக் கொண்டது. ஆழ்ந்த காட்டின் நடுவே அமைதியான குளத்தில் விரியும் நிலவொளி போன்ற அமைதியான தருணங்களை விவரிக்கிறது.
Episodes

Sense & Sensibility - ஜேன் ஓஸ்டினின் படைப்புலகம்
சமூக யதார்த்தம், மனித உணர்வுகள், குடும்பங்களிடையேயான முரண்பாடுகள் எனப் பல பண்புகளைத் தீவிரமாகவும் மெலிதான நையாண்டியோடும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே எழுதிய நாவலாசிரியர் ஜேன் ஓஸ்டின். அவருடைய ‘Sense and Sensibility’ நாவலை மையமாக வைத்து இந்த உரையாடல் இடம்பெறுகிறது.எலினோர், மரியானே, பிராண்டன், எட்வேர்ட், திருமதி டாஷ்வுட், வில்லபி, பஃன்னி போன்ற பல தனித்துவமான பாத்திரங்களினூடு மனித அகத்தின் முரண்பாடுகளை

The Anthropologists
துருக்கியைப் பூர்வீகமாகக்கொண்ட ‘ஐஷீகுள் சவாஸ்’ என்ற எழுத்தாளர் எழுதிய ’The Anthropologists’ என்ற நாவலைப்பற்றி இம்முறை உரையாடியிருக்கிறோம்.சென்ற வருடம் வாசித்தவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த நூல் இது. புதிய வடிவம். ஒரு புதிய நகரிலே (அது பாரிசாக இருக்கலாம்) இளம் தம்பதி ஒன்று எப்படி வாழ்வை ஆரம்பிக்க முனைகிறது என்ற எளிமையான களத்தைக் கொண்ட நாவல் இது. ஆசியாவும் மானுவும் புதிய நகரில் தாம் குடியிருக்க சிறு

Mother Mary Comes To Me
அருந்ததி ரோய் எழுதிய Mother Mary Comes To Me நூலை மையமாக வைத்து, தாய்–மகள் உறவின் சிக்கல்களையும், அன்பும் வன்முறையும் ஒரே நேரத்தில் கலந்து நிற்கும் அந்த முரண்பட்ட வெளிகளையும் ஜீவியும் ஜேகேயும் இந்த உரையாடலில் ஆராய்கிறார்கள்.பொதுவாழ்வில் பெண்ணியவாதியாகப் போற்றப்பட்டவராகவும், வீட்டிற்குள் குழந்தைகளை வன்முறைக்குள்ளாக்கிய தாயாகவும் இருந்த மேரி ரோயைத் தாயாகக் கொண்ட மகளாக, அந்த முரண்பாட்டை அருந்ததி ரோய்

The River Carried Us - 2025
The things that helped us get through 2025.இந்த வருடம் எம் இருத்தலுக்கும் இயங்கலுக்கும் துணைபோன விசயங்கள்.ஜீவி, ஸம்ரக்ஷணா & ஜேகே

The Kite Runner - நாவல் வாசிப்பு அனுபவம்
காலித் ஹொசெயினி எழுதிய ‘The Kite Runner’ நாவலைப் பற்றிய வாசிப்பு அனுபவம். ஆப்கானைச் சேர்ந்த அமீரின் சிறுவயது காபுல் வாழ்வும் அங்கு அவன் நண்பன் ஹசனுக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்த பாதிப்பும் வாழ்வு முழுதும் அது எப்படி அவனைத் துரத்துகிறது என்பதைப் பேசும் நாவல் இது. அதற்கான பரிகாரத்தைச் செய்வதற்கான சந்தர்ப்பம அமீருக்கு எப்படிப் பின்னாளில் ஏற்படுகிறது, அதற்குப்பின்னர் என்ன என்பதுதான் இந்நாவல். அமீரின்

வாசிப்பு அனுபவம் - Unaccustomed Earth by Jhumpa Lahiri
ஜூம்பா லாஹிரியை வாசித்தல் என்பது தனி அனுபவம். பேரமைதியும் பெரும் பிரளயமும் நிறைந்து கிடக்கும் மனிதர்களைப் பாத்திரமாக்குபவர் லாஹிரி. அவருடைய Unaccustomed Earth தொகுப்பிலிருக்கும் "Once in a lifelite" கதையைப்பற்றிய பார்வை இது.











